காதல்

காலம் எல்லாம் காத்திருப்பேன்
ஒவ்வொரு இரவும்
நீ வந்து
தாலாட்டினாலும்
ஒரு நொடியில் - என்
மனதை உடைத்தவள் - நீ
உனக்காக உருகியது
என்னிதயம்...

இதயங்கள் ஒன்றாக
சேர்ந்த பின்
அன்பின் பரிமாணங்கள்
பல வடிவில் தந்தாய்...

நிரந்தரமாக நீ வேண்டும்
எனக்கு...
என் மனதை பிடித்தாட் போல்
உடலையும் பிடித்தாய்...
மறவாமல் - உன்
அன்பினை வாரி வழங்குகிறாய்
என்னால் முடியவில்லை...
நம் உறவுக்கு
உயிரூட்ட முடியவில்லை...

உன் உறவு வேண்டும்
என் உயிருள்ளவரை...
என்றும் காத்திருபேன்
உனக்காக...


உன்னைப்போல்
உன்னை போல் யாரும்

என் மேல்
அன்பு வைத்ததில்லை??

உன்னை போல் யாரும
என்னை
இத்தனை விரிவாய் அறிந்ததில்லை?..

உன்னை போல் யாரும
என்னை
சுகமாய் நெஞ்சில் ஏந்தியதில்லை?.

என்றும்
உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும்
என்னை போல வாழப்போவதில்லை?..




காதலின் விளையாட்டு

பசிக்கும் பருவம் இது

ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்

பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.

குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.

அவள் தந்த அற்புத இன்பம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த
ஆரோக்கிய இன்பம்.
மறைந்த கதிரவனை எதிர்பார்த்தேன்
அவன் மறு நாள் வந்தான்
ஆனால் மறைந்த என் காதலி
எப்போது திரும்பி வருவாள்.

ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?

காதல் விற்கும் பொருளா?

காதலி மீது

சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.

காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!

தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது

காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை

பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!


உண்மைக்காதல்
உண்மைக்காதல்


ஒரு கவசம்
உலக சாக்கடையில்
ஒட்டிக்கௌ்ளாமல்
காக்கிறது!

ஒன்றை ஒன்று
புனிதப்படுத்துகிறது!

ஆயிரம் பிரச்சினைகள்
அலை அலையாக வந்தாலும்
அடித்து செல்லவிடாமல்
ஆழ்கடல் நங்கூரம் போல்
அமைந்து விடுகிறது!

தெய்வத்துடன்
இருப்பதுபோல்
தெளிவு பெரும்
உள்ளம்!

வேங்கையயின்
வீரமும் வரும்
மலர்களின்
மென்மையும் மலரும்!

உண்மைக்காதல்
உனக்கொரு
முகவரியைக் கொடுக்கும்!

தியாகத்தின்
வாசல் திறக்கும்
ஒன்றே நாம் என்ற
உண்மை விளங்கும்!

கலங்கமில்லா காதல்
கடவுளின் குழந்தை!

காதல் ஒளி
காட்டி விடும்
பக்தியின் உருவத்தை
இறைவனை சென்றடையும்
இருதியில்
இச் சக்தி!

என் இனியவளே!
என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா 

உன்மேல் உள்ள ஆசை
உன்னை நினைக்கும் போது
என் இரு விழிகளையும் இறுக
மூடிக் கொள்கின்றேன் - ஏனெனில்
என் நினைவுகளின் நிழல்களை
உன் நிஜங்கள் மறைத்து விட
வேண்டும் என்பதற்காக.-என்
கடந்த கால நினைவுகள்
எவ்வளவு தூரம் என்னை
வேதனைப்படுத்துகின்றதோ அதேபோல்
உன் நிகழ்கால நினைவுகள் என்னை
எதிர் காலம் நோக்கி
நடைபோட வைக்கின்றது.
சாதனைக்கான தூரங்கள்
வேதனையைத் தரலாம்-ஆனால்
வேதனையின் முடிவில் தான்
சாதனைகள் உருவாகின்றன.
நாம் சந்தித்து மகிழ்ந்திருந்த
நாட்களை விடசந்திப்போமா என
சிந்தித்த நாட்கள்தான்
அதிகம் அல்லவா
வாழ்க்கையில் தோற்ற நாட்கள்
அதிகமானால் வெற்றிகள் சொற்ப
நாட்களில் கிடைத்துவிடும் அதேபோல்
நாம் சிந்தித்த நாட்கள்
அதிகமாக இருப்பதால் விரைவில்
நாம் சந்தித்தே தீருவோம்.

என் இதயத்தில் நீ
நீ
என் இதயத்தில்
இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள்
என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்...


என் பிழை...
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்

என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே

காவலன்...
நான்
உன் கவிதைகளுக்கு
வாசகன் மட்டுமல்ல

உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட

தூதனுப்புகின்றேன்...
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்

உன் இதயத்தில்
ஓர் இடம்
வேண்டும் எனக்கு

ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது

என் துணை...
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்

நிலா; நீ வேண்டும்
என்கிறது என்
நட்சத்திரங்கள்

ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்


குழந்தை...
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்

திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்